Short news

‘ரசவாதி’ சித்த மருத்துவர் பற்றிய கதையா?

இயக்குநர் சாந்தகுமார் இயக்கியுள்ள படம் 'ரசவாதி -தி அல்கெமிஸ்ட்'. இந்தப் படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. படம் பற்றி இயக்குநர் சாந்தகுமார், “சித்த மருத்துவரான அர்ஜுன் தாஸ் கொடைக்கானலில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவருடைய கடந்த கால விஷயங்கள் அவரைத் துன்புறுத்துகின்றன. அதற்கு அவர் என்ன தீர்வு காண்கிறார் என்பது படம். உறவுகளை மையப்படுத்திய கதை.” என்று தெரிவித்துள்ளார்.

x