கர்நாடகாவின் ஆலந்த்(Aland) தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான 'ஆதாரங்களை' வெளியிட்டார். பின்னர் பேசிய அவர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் குமார், வாக்கு மோசடி செய்பவர்களை காப்பாற்றுகிறார். அதன்மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என தெரிவித்துள்ளார்.