Short news

தங்கம் விலை ரூ.81,000-ஐ தாண்டி புதிய உச்சம்

சென்​னை​யில் இன்று ஆபரணத் தங்​கத்​தின் விலை மேலும் உயர்ந்​து, மீண்​டும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. 22 காரட் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்​து, ரூ.81,200-க்கு விற்​பனை செய்யப்படுகிறது. அதேபோல இன்று ஒரு கிராம் தங்​கத்தின் விலை ரூ.90 உயர்ந்​து, ரூ.10,150-க்கு விற்​கப்​படுகிறது. குடும்ப நிகழ்ச்​சிகளுக்​காக நகை வாங்க எண்​ணி​யிருந்​தோர் கடும் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

x