Short news

‘பாஜகவுடனான உறவு முறிந்தது’ - ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். கூட்டணி முறிவுக்கான காரணத்தைக் கேட்டபோது, “காரணம் நாடு அறிந்ததே. அதை யாரும் சொல்லத் தேவையில்லை. பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது அனைவருக்கும் தெரியும்.” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

x