தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நடந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 281 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயங்கர வெடிப்புச் சம்பவம், எதனால் நிகழ்ந்தது என்ற உறுதியான காரணம் இதுவரை தெரியவில்லை. என்றாலும், துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.