தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகளுக்கு திட்ட செலவு 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வீடு கட்ட ஒரு சதுர அடி ரூ.2000 வரை இருந்தது. இப்போது ஒரு சதுர அடிக்கு ரூ.2300 ஆக செலவு அதிகரித்துள்ளது. இதனால் புதிதாக வீடு கட்டும் நடுத்தர மக்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.