Short news

உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று நீதிபதிகள் நியமனம்

உச்ச நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று மூவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

x