1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும், வக்பு அமைப்புகளைப் பாதுகாப்பதிலும் பிரதமர் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.2) கடிதம் எழுதியுள்ளார்.