கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் விவாதத்துக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்தார். தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.