Short news

காடுதான் களம்... - ராஜமவுலியின் அடுத்த பட பணிகள் மும்முரம்

‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு ராஜமவுலி இயக்கவுள்ள அடுத்த படத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் பணிகளை கடந்த சில மாதங்களாக கவனித்து வருகிறார் ராஜமவுலி. முழுக்க காடுகளை பின்புலமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கி இருக்கிறார். இதில் நாயகனாக மகேஷ் பாபு, நாயகியாக பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

x