பந்தலூர் சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 45க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்திய சிடி16 என்ற புல்லட்ராஜா காட்டுயானை ட்ரோன் கேமரா மூலம் அதன் இருப்பிடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானை சாணத்தை நெருப்பில் போட்டு புகை உண்டாக்கப்படுகிறது. வீடுகளின் கதவுகள், ஜன்னல்களில் மிளகாய் தூள் தடவப்பட்ட துணிகளால் தோரணம் கட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த யானை ஊருக்குள் நுழையாமல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.