விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மருமகனும் நடிகருமான சுஷாந்த்தை காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கு விளக்கம் அளித்துள்ள மீனாட்சி சவுத்ரி, “இதில் உண்மையில்லை. இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என எனக்குத் தெரியவில்லை. யாரையும் காதலிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
TO Read more about : தெலுங்கு நடிகருடன் திருமணமா? - மீனாட்சி சவுத்ரி விளக்கம்