Published : 24 Jul 2014 10:52 AM
Last Updated : 24 Jul 2014 10:52 AM

ஆரோக்கியமான வாழ்வுக்கு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் ஒபாமா அறிவுரை

ஆரோக்கியமான வாழ்வுக்கு அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷேல் (50) தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘டிரிங்க் அப்’ விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியில் மிஷேல் கூறியதாவது:

அதிக அளவில் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத் துக்கு மிகவும் நல்லது. எனவே தவறாமல் தண்ணீர் குடியுங்கள். ‘டிரிங்க் அப்’ என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடங்கி ஓராண்டுக்குள்ளாகவே பாட்டி லில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை 3 சதவீதம் அதிகரித் துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதுதவிர ஒட்டுமொத்த தண்ணீர் பயன்பாடும் 3 சதவீதம் அதிகரித் துள்ளது.

குழந்தைகளைக் கவரும் வகையில் நொறுக்குத் தீனிகளை விளம்பரப்படுத்துவதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் அதிக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதுபோல உடல் ஆரோக்கியத் துக்கு உகந்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தால் குழந்தைகள் அதை விரும்புவார் கள். பொதுமக்களும் ஆரோக்கிய மான பொருட்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள்.

அந்த வகையில் முதல்கட்டமாக தண்ணீரை சந்தைப்படுத்துவதில் வெற்றி பெற்று விட்டால், பழங் கள், காய்கறிகள், பயறு வகை கள், பால் பொருட்கள் உட்பட ஆரோக்கியமான மற்ற பொருட் களையும் அதே வழியில் எளிதாக சந்தைப்படுத்த முடியும். குழந்தைகளும் இத்தகைய பொருட்களை விரும்பி சாப்பிடுவார்கள்.

அமெரிக்காவில் இப்போது 90 சதவீத பள்ளிக்கூடங்களில் அரோக்கியமான உணவு வகை கள் வழங்கப்படுகின்றன என்றார் மிஷேல். குழந்தைகளும் பெரியவர் களும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக டிரிங்க் அப் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மிஷேல் மேற்கொண்டு வருகிறார்.

இதுதவிர, குழந்தைகளின் உடல் பருமனை கட்டுப்படுத்துவது, ஆரோக்கியமான உணவுப் பழக் கத்தைக் கடைபிடிப்பது, உடலை கச்சிதமாக வைத்துக்கொள்வது குறித்து அமெரிக்க குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x