Published : 15 Jul 2014 08:30 AM
Last Updated : 15 Jul 2014 08:30 AM
பிரிக்ஸ் நாடுகளின் தலைவர் களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசுகிறார். அப்போது உலக வங்கிக்குப் போட்டியாக வளர்ச்சி வங்கி அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடு களின் கூட்டமைப்பான பிரிக்ஸின் 6-வது உச்சி மாநாடு பிரேசிலின் போர்டலிசா, பிரேசிலியா நகரங்களில் 15, 16-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டார். அன்றிரவு ஜெர்மனியின் பெர்லின் நகரில் அவர் தங்கினார். திங்கள்கிழமை காலை பெர்லினில் இருந்து புறப்பட்டு பிரேசிலின் போர்டலிசா நகரை அவர் சென்றடைந்தார்.
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி
அங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகி யோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
அப்போது பிரிக்ஸ் அமைப் பின் சார்பில் வளர்ச்சி வங்கி தொடங்குவது குறித்து முக்கிய மாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. புதிய வங்கியை தொடங்குவதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு இந்த மாநாட்டி லேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பானின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
எனவே இந்த பன்னாட்டு நிதி அமைப்புகளுக்கு போட்டியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய சர்வதேச வங்கி தொடங்க 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.
ஷாங்காய் அல்லது புது டெல்லி
இதன்படி பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் சரிசமமாக முதலீடு செய்து ரூ.3,05,000 கோடியில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியைத் தொடங்கவும் அதன்பின் வங்கி முதலீட்டை ரூ.6,10,000 கோடி ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வங்கியின் தலைமை அலுவலகத்தை சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காய் அல்லது இந்திய தலைநகர் புது டெல்லியில் அமைக்கலாம் என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஷாங்காயில் அமைத்தால் மொழிப் பிரச்சினை, சீனாவின் ஏதேச்சதிகாரம் ஆகியவை பெரும் பிரச்சினைகளாக எழக்கூடும் என்று தெரிகிறது. எனவே பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் அமையக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா ஆர்வம்
புதிய வங்கியைத் தொடங்கு வதில் ரஷ்யா அதிக முனைப்புடன் செயல்படுகிறது. உக்ரைன் விவ காரத்தால் ரஷ்யா மீது அமெரிக் காவும் ஐரோப்பிய யூனியனும் பல்வேறு பொருளாதாரத் தடை களை விதித்துள்ளன.
எனவே அந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியத்துக்குப் போட்டியாக பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியை வளர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT