Published : 24 Dec 2022 06:31 AM
Last Updated : 24 Dec 2022 06:31 AM

அமெரிக்கா மறைமுக போர் நடத்துகிறது - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றச்சாட்டு

விளாடிமிர் புதின்

மாஸ்கோ: ‘‘உக்ரைன் மீதான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். ஆனால், ரஷ்யா மீது அமெரிக்கா மறைமுக போர் நடத்தி வருகிறது’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம் சாட்டி உள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. தொடர்ந்து உக்ரைன் - ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை திடீரென அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இது சர்வதேச அளவில் பரபரப்பானது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் நேற்று கூறியதாவது: உக்ரைன் மீது போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறேன். விரைவில் திருப்தி கரமான வகையில் போருக்கு முடிவு காணப்படும். ஆனால், உக்ரைன் (அதிபர் ஜெலன்ஸ்கி) அதை விரும்பவில்லை. அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. நாங்கள் சொல்லும் விஷயங்களை உக்ரைன், அமெரிக்கா ஆகிய 2 நாடுகளும் காது கொடுத்து கேட்கவில்லை. உக்ரைனைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி எங்களை பலவீனப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. உக்ரைனை போர்க் களமாக பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா.

எங்கள் நோக்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண் டும். அதற்காக பாடுபடுகிறோம். தொடர்ந்து பாடுபடுவோம். எல்லா பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை அல்லது ஏதாவது ஒரு வழியில் தீர்வு ஏற்படும். இதை உக்ரைன் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். இவ்வாறு புதின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x