Published : 16 Nov 2022 10:18 AM
Last Updated : 16 Nov 2022 10:18 AM

போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணை: 2 பேர் பலி; ஜெலன்ஸ்கி இரங்கல்

வார்சா: உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அண்டை நாடான போலந்து நாட்டில் ரஷ்ய ஏவுகணை விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த ஏவுகணையை ஏவியது ரஷ்யா தானா என்பது இன்னும் உறுதியாகாத நிலையில் போலந்துக்கான ரஷ்ய தூதருக்கு அந்நாடு சம்மன் அனுப்பியுள்ளது.

போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள ப்ரெஸ்வோடோவ் எனும் கிராமத்தில் ஏவுகளை விழுந்துள்ளது. இதனையடுத்து எல்லையில் தனது பாதுகாப்புப் படைகளை போலந்து தயார் நிலையில் வைத்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், போலந்து அதிபர் ஆண்ட்ரேஸ் டுடாவை தொடர்பு கொண்டு பேசினார். இந்த ஏவுகணை தாக்குதல் தொடர்பான புலனாய்வில் அமெரிக்க போலந்துக்கு அனத்து உதவிகளையும் செய்யும் என்று பைடன் உறுதியளித்ததாகத் தெரிகிறது.

போலந்து நேட்டோ உறுப்பு நாடு என்பதால் நேட்டோ சட்டப்பிரிவு 5ன் படி இந்த தாக்குதல் தற்செயலாக நடந்ததா இல்லை திட்டமிட்டே நடத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணையில் உறுப்பு நாடுகள் உதவுவது அவசியன். அதன் அடிப்படையிலேயே அமெரிக்கா தனது உதவிக் கரத்தை நீட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் அமெரிக்க அதிபர் பைடன், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்கிடம் பேசி தகவல் அறிந்தார். நேட்டோ நாட்டு தூதரக அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

போலந்து மீதான ஏவுகணை தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லெஸ் மைக்கேல் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள பிரெஞ்சு அதிபர் இமானுவேன் மாக்ரோனும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டு லிவ் உள்ளிட்ட பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ மூலம் உரையாற்றுகையில், "நான் போலந்து அதிபர் ஆண்ட்ரேஸ் டூடாவுடன் பேசினேன். போலந்து நாட்டைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்தேன். இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொண்டோம். உக்ரைன், போலந்து மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் ஏன் இந்த உலகம் முழுவதுமே ரஷ்ய தீவிரவாதத்தில் இருந்து பாதுகாக்கப் பட வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x