Published : 08 Jul 2014 12:42 PM
Last Updated : 08 Jul 2014 12:42 PM
ஸ்பெயினில் புகழ்பெற்ற எருது விரட்டு திருவிழாவான ‘சான் பெர்மின்’ ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஸ்பெயின் நாட்டில் சான் பெர்மின் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக ஏராளமான காளைகள் வீதியில் விரட்டப்படும். அப்போது, வீதியில் திரண்டிருக்கும் மக்கள் அக்காளைகளை எதிர்கொள்வர். காளைகளின் முரட்டுப் பாய்ச் சலுக்கு அகப்படாமல் ஓடி ஒதுங்குவர்.
இத்திருவிழாவைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் கூடுவர். இத்திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற எருது ஓட்டத்தில் ஒருவரின் தொடையை எருது குத்திக் கிழித்து விட்டது. மேலும் நால்வர் பலத்த காயமடைந்தனர். ஏராளமானவர்களுக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட் டுள்ளன.
மாலை நேரத்தில், காளைகளைக் கொல்லும் போட்டி நடைபெறும். இதற்காகப் பிரத்தியேகப் பயிற்சி பெற்ற போட்டியாளர், குதிரையின் மீதிருந்தோ அல்லது தரையிலிருந்தபடியோ காளையின் முதுகில் சிறிய கத்திகளைப் பாய்ச்சி அதனைக் களைப்படையச் செய்து கொல்வர்.
இவ்வாறு கொல்லப்படும் காளைகளின் இறைச்சி, பாம் ப்லோனா நகரிலுள்ள விடுதிகளில் உணவாகப் பரிமாறப்படும்.
கடந்த 1924-ம் ஆண்டு முதல் இதுவரை இத்திருவிழாவில் காயமடைந்து 15 பேர் உயிரிழந் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT