Published : 22 Jul 2014 10:24 AM
Last Updated : 22 Jul 2014 10:24 AM
பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 572-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் 29 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 27 பேர் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் பொதுமக்கள் ஆவர்.
ஐ.நா.வும் அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வந்தாலும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொலை:
தெற்கு இஸ்ரேலில் ஊடுருவ முயன்ற ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு காஸாவில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த இவர்கள் முயன்றனர். அப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.
15-வது நாள் தாக்குதல்:
ஜூலை 8-ம் தேதி இஸ்ரேல் தொடங்கிய ஆபரேஷன் புரொடக்டிவ் எட்ஜ் தாக்குதலில் 572 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். 3,100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT