Published : 17 Jun 2014 10:26 AM
Last Updated : 17 Jun 2014 10:26 AM
இராக்கில் நகரங்களை கைப்பற்றி வரும் ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள், ராணுவ வீரர்களை கைது செய்து கொத்து கொத்தாக சுட்டுத்தள்ளி வருகின்றனர்.
இதுவரை 1,700 ராணுவ வீரர்களை கொன்று குவித்துள்ளதாக தீவிரவாதிகள் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் இணையத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
ஆனால், அந்த புகைப்படங்கள் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப்பெரிய அளவிலான படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது குறித்து இராக் அரசு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். படுகொலைகள் நடந்ததாகக் கூறப்படும் சலாஹுதின் மாகாணத்தில் பெரிய அளவில் இறுதிச் சடங்குகள் ஏதும் நடைபெறவில்லை.
இராக்கில் உள்ள மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளர் என்ரின் எவெர்ஸ் கூறும்போது, “புகைப்படங்களை ஆய்வு செய்து வருகிறோம். 1,700 பேரை கொன்றதாக ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளது உள்நாட்டில் பிரிவினைப் போரை தூண்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளது” என்றார்.
அதே சமயம் இராக் அரசு உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சாலாஹுதின் மாகாணத்தில் கடந்த வாரம் படுகொலைகள் நடந்திருப்பது உண்மைதான். திக்ரித் நகரிலும் இதுபோன்ற படுகொலைகள் நிகழ்ந்துள்ளன என்றார். தொடர்ந்து இதுபோன்ற புகைப் படங்கள் வெளியாவதைத் தடுக்க சமூக வலைதளங்க ளான யூ டியூப், ட்விட்டர், பேஸ்புக் உள் ளிட்ட வற்றை இராக் அரசு தடை செய்துவிட்டது.
4000 வீரர்கள் சிறை
இதற்கிடையே உள்ளூர் செய்தியாளர் ஒருவர் கூறுகையில், “சலாஹுதின் மாகாணத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இராக் ராணுவத்தின் 4-வது பிரிவு சிதைந்துவிட்டது. வீரர்கள் அனைவரும் தீவிரவாதி களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கிவிட்டனர். தற்போது 4 ஆயிரம் வீரர்களை தீவிரவாதிகள் சிறை வைத்துள் ளனர்” என்றார்.
திக்ரித்தில் உள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பிரதிநிதி கூறும்போது, “திக்ரித் நகரில் கைது செய்யப்பட்ட வீரர்களில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த வர்களாக இருந்தால், அவர்களை தீவிரவாதிகள் விடுவிக்கின்ற னர். ஆனால், ஷியா பிரிவினராக இருந்தால் சுட்டுக்கொல்கின்றனர். இந்த படுகொலைகள் அனைத்தும் டைக்ரிஸ் நதிக் கரையோரத்தில் உள்ள முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் பழைய மாளிகையினுள் நடப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்” என்றார்.
இணையத்தில் படங்கள்
ஐ.எஸ்.ஐ.எல். (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் லெவன்ட்) அமைப்பு சார்பில் ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங் களில், ஷியா பிரிவினருக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. ஷியா பிரிவைச் சேர்ந்தோரை நூற்றுக்கணக்கில் கொன்றழிப் போம் என்பது போன்ற வகுப்பு வெறியைத் தூண்டும் வகையி லான கருத்துகள் அதில் கூறப்பட் டுள்ளன.
கைகள் கட்டப்பட்டு தரையில் படுக்க வைத்த நிலையில் இருக் கும் ராணுவ வீரர்களை முகத்தில் கருப்புத் துணியை அணிந்த படி துப்பாக்கியுடன் காட்சியளிக் கும் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டுத்தள்ளும் காட்சி அந்த புகைப் படங்களில் இடம் பெற்றுள்ளன.
கொன்று புதைப்பு?
சில புகைப்படங்களில் கொல்லப்பட்ட வீரர்களின் அருகிலேயே அவர்களை புதைப்பதற்கான குழிகளும் காணப்படுகின்றன. எனவே, வீரர்களை கொன்று, அவர்களை தீவிரவாதிகள் புதைத்திருக்க வாய்ப்பிருப் பதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 5 இடங்களில் இதுபோன்ற படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே சன்னி பிரிவு சார்புடைய ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட, ஷியா பிரிவைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் ஆயுதம் தாங்கி ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT