Published : 05 Jun 2014 08:36 AM
Last Updated : 05 Jun 2014 08:36 AM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை யடுத்து தனது அதிர்ச்சியை வெளிப் படுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கடந்த 2 வாரங்களில் மட்டும் உலகம் முழுவதும் பெண் கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றதை நாம் அறிவோம். நைஜீரியா முதல் பாகிஸ்தான் வரையிலும் கலிபோர்னியா முதல் இந்தியா வரையிலும் இதுபோன்ற சம்பவங் கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கழிப்பறை வசதி இல்லா ததே இதற்குக் காரணம் என கூறப்படுவது அதிர்ச்சி அளிப்ப தாக உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது அமைதி மற்றும் பாதுகாப்பை உள்ளடக்கிய, மனித உரிமை தொடர்புடைய, வளர்ச்சியை உள்ளடக்கிய பிரச்சினை ஆகும். அனைத்து வகையிலும் பெண்களுக்கு சம உரிமை கிடைப்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் எதிர்பாராதவிதமாக இது உலகம் முழுவதும் நடைபெறு கிறது. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது நம் அனை வருக்கும் அவமானம் ஏற்படுத்தக் கூடியது என்பதை மக்கள் அனை வருக்கும் உணர்த்த வேண்டும். பெண்களுக்கு எதிரான வன் முறைக்கு எதிராக நான் குரல் கொடுக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும் என பான் கி மூன் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
யுனிசெப் அமைப்பின் இந்தி யாவுக்கான பிரதிநிதி லூயிஸ் ஜியார் ஜெஸ் அர்செனால்ட் கூறுகையில், "இந்தியாவில் உள்ள 65 சதவீத கிராம மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் பெண்களும் சிறுமிகளும் இரவில் வெளியில் செல்ல நேரிடுகிறது. இது அவர்களை அவமதிப்பது மட்டுமல்லாமல் அவர்களது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானதாகும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT