Published : 22 Jun 2014 01:21 PM
Last Updated : 22 Jun 2014 01:21 PM

நீங்களும் வாங்கலாம் ‘ஸ்கட்’ ஏவுகணை அடுத்த மாதம் அமெரிக்காவில் ஏலம்

ஸ்கட் ரக ஏவுகணை முதல் முக்கியமான போர்களில் பயன் படுத்தப்பட்ட பல்வேறு பீரங்கி கள், ராணுவ வாகனங்கள், தள வாடங்கள் உள்ளிட்டவை அமெரிக் காவில் ஏலம் விடப்பட வுள்ளன.

தெற்கு சான்பிரான்ஸ்கோவில் ஜூலை 11, 12-ம் தேதிகளில் இந்த ஏலம் நடைபெறவுள்ளது. முதல் உலகப் போரில் பயன் படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்பட 240 ராணுவ வாகனங்கள் ஏலம் விடப் படுகின்றன. இவற்றில் பல இப்போதும் இயங்கும் நிலையில் உள்ளன.

உலகிலேயே தனிநபர் ஒருவரி டம் உள்ள அதிகபட்சமான ராணுவப் பொருள்கள் சேகரிப்பு இது என்று கூறப்பட்டுள்ளது. கலிபோர்னியாவைச் சேர்ந்த பொறியாளரும் வரலாற்று ஆர்வலருமான மறைந்த ஜேக்கஸ் எம்.லிட்டில்பீல்ட் இதனை சேகரித்தவர் ஆவார்.

இப்போது அவரது ராணுவ பொருள் சேகரிப்புகள் அனைத் தும் அறக்கட்டளை ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளைகுடா போரின்போது அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஸ்கட் ஏவுகணை ஒன்றும் ஏலத்துக்கு வருகிறது. ஆனால் இதனை பயன்படுத்த முடியாது. இது 3 லட்சம் அமெரிக்க டாலர்க ளுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகக் போரில் ஜெர்மனி பயன்படுத்திய இரு பீரங்கிகளும் ஏலம் விடப்பட வுள்ளன.

இந்த ஏலம் தொடர்பாக வெளிநாட்டு அரசுகள், மன்னர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் பலரும் ஆவலுடன் விசாரித்துள்ளனர். எனவே இந்த ஆயுத ஏலம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x