Published : 07 Jun 2014 05:26 PM
Last Updated : 07 Jun 2014 05:26 PM
ஈராக் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு, மாணவர்களை பிணைய கைதிகளாக வைத்திருந்த தீவிரவாத அமைப்பு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி உள்ளது.
ஈராக்கில் ரமாதி மாகாணத்தில் உள்ள அன்பர் பல்கலைக்கழகத்தை கைப்பற்றிய அடையாளம் தெரியாத தீவிரவாதிகள், அங்கிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களை பணைய கைதியாக வைத்திருந்தனர்.
தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஒருவர் பத்திரிகையாளரிடம் பேசியபோது, "என் தலைமை எந்த தகவலையும் வெளியிட எனக்கு அனுமதி அளிக்கவில்லை" என்றார். இதனால் தீவிரவாதிகளின் கடத்தலுக்கான நோக்கமும் அவர்களது பின்னனியும் மர்மமாக இருந்து வந்த நிலையில், ஒரு வாரத்திற்கு பின் திடீரென முற்றுகையிட்டிருந்த பல்கலைக்கழகத்திலிருந்து தீவிரவாதிகள் வெளியேறி உள்ளனர்.
தீவிரவாதிகள், மாணவர்களின் வாகனங்களை எடுத்துக்கொண்டு அந்த மாகாணத்திலிருந்து வெளியேறியதாக தெரியவந்துள்ளது. 2007 ஆண்டு ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது முதல், அந்நாட்டில் அடையாளம் தெரியாத சில தீவிரவாத அமைப்புகள் அரசு அலுவகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை கைப்பற்றி மக்களை பயமுறித்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT