Published : 16 May 2022 06:40 AM
Last Updated : 16 May 2022 06:40 AM
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரத்தப் புற்றுநோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யஅதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘புதினுக்கு என்ன நோய் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறியுள்ளார்.
இதனிடையே, புதினுக்கு நெருக்கமான ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் மேற்கு நாட்டைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபருடன் பேசும் போது, ரத்தப் புற்றுநோயால் புதின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரி வித்துள்ளார். அந்த தொழிலதிபர் பேசும் உரையாடலின் ஒலிப் பதிவு கிடைத்துள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளி யாகும் ‘நியூஸ் லைன்ஸ்’ பத் திரிகை கூறியுள்ளது. ரஷ்ய தொழிலதிபருக்குத் தெரியாமல் அவரது அனுமதி இல்லாமலே அவர் கூறிய தகவலை மேற்கு நாட்டின் தொழிலதிபர் ரகசியமாக ஒலிப்பதிவு செய்திருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க உத்தரவிடுவதற்கு முன்ன தாக, ரத்தப் புற்றுநோய்க்காக புதின் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் வெறிபிடித்தவர் போல நடந்து கொண்டதாகவும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்தப் பேச்சில் ரஷ்ய தொழிலதிபர் கூறியுள்ளதாக பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ராணுவ உயர் அதிகாரி ஒருவரும், புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உடல்,மன ரீதியாக அவர் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிபர் புதினுடன் ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு சமீபத்தில் காணொலி காட்சி மூலம் போர் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய காட்சிகள் வெளியானது. அந்த வீடியோவில் மேஜையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்த புதின் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். அந்த வீடியோ காட்சிகள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றும் ‘நியூஸ் லைன்ஸ்’ பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT