Published : 17 Jun 2014 10:00 AM
Last Updated : 17 Jun 2014 10:00 AM
நான் மியான்மரின் அதிபராவது என்பது மக்களின் விருப்பத்தைப் பொருத்தே அமையும் என மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.
ஆங் சான் சூச்சியின் நான்கு நாள் நேபாள சுற்றுப்பயணம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. அப்போது, மியான்மரின் அதிபரா வது குறித்துக் கேட்ட போது, அது மக்களின் விருப்பத்தைப் பொருத்தது எனக் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: எதிர்காலத்தில் நான் அதிபராவது என்பது மக்களின் விருப்பத்தைப் பொருத்தது. சட்டத்திருத்தத்தில் மக்களின் விருப்பம், யார் அதிபராக வேண் டும் என்பதில் மக்களின் விருப்பம் ஆகியவற்றைப் பொருத்தே நான் அதிபராவேனா இல்லையா என்பது முடிவாகும் என்றார்.
மியான்மர் அரசமைப்புச் சட்டத் தின்படி, எவரொருவரின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தாலும் அவர் மியான்மரின் அதிபராகவோ, துணை அதிபராகவோ வர முடியாது.
ஆங் சான் சூச்சியின் மறைந்த கணவரும், இத்தம்பதியின் 2 குழந்தைகளும் பிரிட்டன் குடியுரிமைபெற்றவர்கள். ஆங் சான் சூச்சி அதிபராவதைத் தடுப்பதற்காகவே 2008-ம் ஆண்டு ராணுவ ஆட்சியாளர்களால் இந்த அரசமைப்புச் சட்டம் நிறைவேற் றப்பட்டது.
இச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக நாடாளுமன்றக் குழு கடந்த வாரம் வாக்களித்தது. இந்தப் பரிந்துரை முழு நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது வரும் 2015-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
1990-ம் ஆண்டு ஆங் சான் சூச்சியின் கட்சி பெரு வெற்றி பெற்ற போதும் ராணுவம் அவரை ஆட்சியமைக்க அனுமதிக்க வில்லை. 2010-ம் ஆண்டு நடந்த தேர்தலை சூச்சியின் கட்சி புறக் 0கணித்தது. ஆனால், 2012-ல் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT