Published : 05 Jun 2014 10:00 AM
Last Updated : 05 Jun 2014 10:00 AM
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினரால் கைது செய்யப்பட்டிருந்த அமெரிக்க வீரர் பாவே பெர்க்தாலை, அந்த அமைப்பினர் கடந்த சனிக்கிழமை விடுதலை செய்தனர். இது தொடர்பான வீடியோ சி.டி. புதன் கிழமை வெளியிடப்பட்டது. பாவே பெர்க்தாலை விடுவித்ததற்கு பதிலாக, அமெரிக்கா கைது செய்து வைத்திருந்த 5 தலிபான் தீவிரவாதிகள் முன்னதாக விடுவிக்கப்பட்டனர்.
அமெரிக்க வீரரை ஒப்படைக்கும் இந்நடவடிக்கை தொடர்பாக தலிபான் அமைப்பு 17 நிமிடங் கள் ஓடக்கூடிய வீடியோ சி.டி. ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அமெரிக்க வீரர்கள், வெள்ளைக் கொடியுடன் நின்று கொண்டிருந்த தலிபான் தீவிரவாதிகளிடமிருந்து பாவே பெர்க்தாலை மீட்டுச் செல்லும் காட்சி அதில் பதிவாகி யுள்ளது. அப்போது, பாவே பெர்க்தாலை பார்த்து, “மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு வராதே. அடுத்த முறை உன்னை யாரும் விடுவிக்க மாட்டார்கள்” என்று தலிபான் தீவிரவாதிகள் அறிவுரை கூறிய காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.
பாவே பெர்க்தாலுக்கு பதிலாக அமெரிக்காவின் குவாண்டனாமோ சிறையிலிருந்த 5 மூத்த தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு அமெரிக்க வீரரை விடுவித்து, அதற்கு பதிலாக 5 தலிபான் தீவிரவாதிகளை குவான்டனாமோ சிறையிலிருந்து மீட்டது தமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று தலிபான் அமைப்பினர் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT