Published : 25 Jun 2014 09:13 AM
Last Updated : 25 Jun 2014 09:13 AM

பயங்கரவாதிகளின் முக்கிய கருவி இணையதளம்: சீனா கவலை- ஆட்கள், நிதியைத் திரட்ட உதவியாக உள்ளது

பயங்கரவாதிகள், தங்கள் நடவடிக் கைகளுக்காக இணையதளத்தை முக்கியக் கருவியாகப் பயன்படுத்து கின்றனர் என சீனா கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன அரசின் இணையதள தகவல் அலுவலக (எஸ்ஐஐஓ) செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

பயங்கரவாதிகள், தங்கள் நடவடிக்கைகளுக்காக இணைய தளத்தை முக்கிய கருவியாகப் பயன்படுத்துகின்றனர். பயங்கர வாதத்தைப் பரப்புதல், வன்முறை மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல், ஆன்லைன் மூலம் பயங்கரவாதத் திறன்களைக் கற்பித்தல் போன்ற வற்றை பயங்கரவாதிகள் இணைய தளத்தின் மூலம் மேற்கொள் கின்றனர். ஒலி, ஒளி மூலம் இணைய தளத்தைப் பயன்படுத்தி பயங்கர வாதத்தை வளர்ப்பது இணைய தளத்தின் புற்றுநோயாகும். பயங்க ரவாதிகளின் இச்செயல் உடனடி யாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத் தில் பயங்கரவாதச் செயல்கள் தலை தூக்கியுள்ளன. இதற்கு கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் தான் காரணம் என சீனா குற்றம் சாட்டியுள்ளது. இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மூலம் பயங்கரவாதம் ஊக்குவிக்கப் படுவதைத் தடுக்கும் வேட்டையை சீனா வெள்ளிக்கிழமை தொடங்கி யுள்ளது. ஒரு ஆண்டு வேட்டையின் முதல் கட்டமாக, முதல் மாதத் திலேயே, 32 பயங்கரவாதக் குழுக்கள் அடையாளம் கண்ட றியப்பட்டுள்ளன. சந்தேகப்படும் நிலையிலுள்ள 380 நபர்கள் பிடித்து விசாரிக்கப்படுகின்றனர். 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜின்ஜி யாங் மாகாணத்தில் காவல்நிலை யத்தின் மீது தீவிரவாதிகள் தற் கொலைத் தாக்குதல் நடத்தி னர். இதையடுத்து கடந்த சனிக்கிழமை 13 தீவிரவாதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

ஜின்ஜியாங் மாகாணம் சீன அரசின் முழுமையான கட்டுப் பாட்டில் இல்லை என்று சொல்லு மளவுக்கு அங்கு பயங்கரவாதச் செயல்கள் அதிக அளவில் நடை பெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x