Published : 29 Jun 2014 01:34 PM
Last Updated : 29 Jun 2014 01:34 PM

இலங்கையில் கலவரம் பாதித்த பகுதிகளில் மறு கட்டமைப்பு பணிகள் தொடக்கம்

இலங்கையில் கலவரம் பாதித்த இடங்களில் சேதமடைந்த சொத்து களை மீண்டும் கட்டமைக்கும் பணிகளை அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இலங்கையின் தென்மேற்கில் உள்ள பெருவலா, தர்கா, அலுத் காமா ஆகிய நகரங்களில் கடந்த 15-ம் தேதி வகுப்பு மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் இறந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்த னர். வீடுகளும் கடைகளும் பெருமளவில் சேதப்படுத்தப் பட்டன. சிறுபான்மையின முஸ்லிம் கள் மட்டுமன்றி, பெரும்பான்மை யினராக சிங்களர்களின் சொத்து களும் சேதமடைந்தன.

இந்நிலையில் சேதமடைந்த 200-க்கும் மேற்பட்ட சொத்துகளை மீண்டும் கட்டமைக்கும் பணி வெள்ளிக்கிழமை காலை தொடங்கி யதாக பெருவலாவில் உள்ள அரசு நிர்வாக அதிகாரி டி.எல்.ஜெயலால் கூறினார்.

அலுத்காமா, தர்கா ஆகிய நகரங்களில் மறு கட்டமைப்பு பணி களுக்காக இலங்கை அரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மீள்குடியேற்றத் துறை அமைச்சர் குணரத்னே வீரகூன் கூறினார்.

கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட இலங்கை அதிபர் ராஜபக்சே, தேசமடைந்த சொத்து களை மறு கட்டமைக்கும் பணியில் ஈடுபடுமாறு ராணுவத்துக்கு உத்தர விட்டார். “மறு கட்டமைப்பு பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத் தால் மட்டுமே இப்பணிகளை காலக்கெடுவுக்குள் முடிக்க முடியும் என்பதால் பணிகள் அதன் வசம் தரப்பட்டுள்ளன” என்று உள்ளூர் எம்.பி.யும் மீன்வளத் துறை அமைச்சருமான ரஜிதா சேனரத்னே கூறினார்.

இலங்கையின் ஸ்திரத் தன்மையை சீர்குலைக்கும் வகை யில், சில சர்வதேச சக்திகள் கல வரத்தை தூண்டிவிட்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சி களும், முஸ்லிம் அமைப்புகளும் குற்றம் சாட்டின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x