Published : 23 Sep 2021 09:11 AM
Last Updated : 23 Sep 2021 09:11 AM
அமெரி்க்காவில் 3 நாட்கள் பயணமாகச் சென்ற பிரதமர் மோடிக்கு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அடுத்துவரும் நாட்களில் அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேச உள்ளார்.குவாட் மாநாடு, நியூயார்க்கில் நடக்கும் 76-வது ஐ.நா. பொதுக்கூட்டத்திலும் பிரதமர்மோடி உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 7-வது முறையாக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுவரை குவாட் மாநாட்டில் காணொலி மூலம் உலகத் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் மோடி முதல்முறையாக நேரடியாக ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்க அதிபர்களைச் சந்திக்க உள்ளார்.
பிரதம்ர மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ வாஷிங்டன் டிசி நகருக்கு வந்துவிட்டேன். அடுத்த 2 நாட்களில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ, பிரதமர்கள் ஸ்காட்மோரிஸன், சுகா ஆகியோர்களைச் சந்திக்க இருக்கிறேன். குவாட் மாநாட்டில் பங்ேகற்று, இந்தியாவுக்கான பல்வேறு பொருளாதார வாய்ப்புகள் குறித்து பெருநிறுவனங்களுடன் பேச உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாஷிங்டன் நகரம் வந்து இறங்கியபோது, கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் மழையைப் பொருட்படுத்தாமல் ஏராளமான இந்திய மக்கள் பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்தனர். பிரதமர் மோடிக்கு அமெரி்க்க அரசின் உயர் அதிகாரிகள், இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் மரியாதை அளித்து வரவேற்றனர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி ட்விட்டரி்ல் பதிவிட்ட கருத்தில் “ நமஸ்தே அமெரிக்கா. அமெரிக்கா வந்து சேர்ந்த பிரதமர் மோடிக்கு தரன்ஜித் சிங் சாந்து வாழ்த்துகளுடன் வரவேற்றார். அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரையன் மெக்கானும் பிரதமர் மோடியை வரவேற்றார். மழைையயும்பொருட்படுத்தாமல் ஏராளமான அமெரிக்கவாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்க ஆன்ட்ரூஸ் விமானநிலையத்தில் காத்திருந்தனர்” எனத் தெரிவித்தார்.
நாளை அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடனை பிரதமர் மோடி நேரடியாகச் சந்திக்க உள்ளார். அமெரி்க்க அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்றபின் காணொலி மூலமே பேசியுள்ள பிரதமர் மோடி முதல்முறையாக நேரடியாகச் சந்திக்க உள்ளார். கடந்த ஏப்ரல் 26-ம் தேதி ஜே பிடனுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் கடைசியாகப் பேசினார். அதன்பின் இப்போது இரு தலைவர்களும் நேரடிாயக சந்திக்க உள்ளனர்.
குவாட் மாநாட்டில் ஜப்பான் பிரதமர் யோஷிஹேட் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஆகியோரையும் பிரதமர் மோடி நேரடியாகச் சந்திக்கஉள்ளார். குவாட் மாநாட்டில் முதல்முறையாக உலகத் தலைவர்களை நேரடியாகச் சந்திக்கும் முதல் பிரதமரும் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை அதிபர் கமலா ஹாரிஸை பிரதமர் மோடி இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேச உள்ளார். இதற்கு முன் ஜூன் மாதம் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, பிரதமர்மோடியுடன் கமலா ஹாரிஸ் தொலைப்பேசியில் பேசியிருந்தார். அதன்பின் இருவரும் தற்போது நேரடியாகச் சந்திக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT