Published : 24 Feb 2016 02:56 PM
Last Updated : 24 Feb 2016 02:56 PM
அமெரிக்கர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை ‘வேட்டையாடி’ கொண்டு செல்கின்றனர் இந்தியர்கள், தான் அதிபரானால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டோனால்டு டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார்.
சர்ச்சை புகழ் டோனால்டு டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம்கள், அகதிகள், குடியேற்றங்கள் குறித்து எதிர்மறையாகப் பேசி வருவது குறித்து ஒபாமா கடும் விமர்சனம் செய்தாலும் அவரது இவ்வகை பேச்சுகளுக்கு பரவலாக அமெரிக்கர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாகவே அங்குள்ள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
லாஸ் வேகாஸில் நடைபெற்ற, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பெரிய கூட்டமொன்றில் டிரம்ப் பேசும்போது, “நம்மை சீனா பதம் பார்க்கிறது, ஜப்பானுடனும் இதே கதிதான், மெக்சிகோவுடன் எல்லையில் நாம் சோடை போகிறோம், பிறகு வர்த்தகத்திலும் சோடை போகிறோம். வியட்நாம், இந்தியா மற்றும் அனைத்து நாடுகளும் நம்மை வைத்து பிழைத்து வருகின்றன.
ஒவ்வொரு நாடும்...ஏனெனில் நாம் நம்மை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
இதனால்தான் நான் கூறுகிறேன், நான் சுயநிதியிலிருந்துதான் செயல்படுகிறேன். நான் இதனைக் கூறுகிறேன் என்றால் நீங்கள் இது பற்றி நினைப்பதை விடவும் ஆழமானது” என்றார்.
அதிபர் தேர்தல் களத்தில் குதித்த நாள் முதலே, டிரம்ப், சீனா, ஜப்பான், இந்தியா, வியட்நாம், மெக்சிகோ நாட்டவர்கள் அமெரிக்க வேலை வாய்ப்புகளை பறித்துச் செல்கின்றனர் என்ற வாதத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT