Published : 15 Jun 2014 01:00 AM
Last Updated : 15 Jun 2014 01:00 AM

ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிக்கக் கூடாது- இலங்கை நாடாளுமன்றத்தில் 17, 18-ல் விவாதம்

ஐ.நா விசாரணைக் குழு இலங் கைக்கு வருவதற்கு அனுமதிக்க கூடாதெனகோரும் தீர்மானம் மீதான விவாதம் வரும் 17, 18ஆம் தேதிகளில் அந்நாட்டு நாடாளு மன்றத்தில் நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைமை கொறடா ஜோன் அமரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் எம்பி, ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எம்பி உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த விவாதத்தில் சில திருத் தங்களை முன்வைக்கவுள்ளதாக வும் கட்சித் தலைவர்கள் கூட்டத் தில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. முன்னதாக, ஐநா மனித உரிமை ஆணையரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு அனுமதி தர மறுப்பது குற்றச்சாட்டுகளை ஒப்புகொள்வதாகிவிடும். தமது தரப்பை எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பை நழுவவிடுவது போலாகிவிடும் என ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக் கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு அனுமதியளிப்பது நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் எனவும் சமாதானத்துக்கு சவாலாக அமையும் எனவும் சுட்டிக்காட்டி, விசாரணைக்கு அனுமதியளிக்கக் கூடாதென்ற கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான மாலினி பொன்சேகா, ஏ.எச்.எம். அஸ்வர், ஆர்.துமிந்த சில்வா, சாந்த பண்டார, அசல ஜாகொட, பீ.சூரியப்பெரும, பியன்த பண்டார, நிமால் விஜேசிங்க ஆகியோர் சபாநாயகர் சமால் ராஜபக்சேவிடம் முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலி களுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பிறகு சிறுபான்மை தமிழர்க ளுடன் சமாதானம் காண அரசு தவறியதாக கண்டித்து ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. நாட்டுக்கு உள்ளேயே மனித உரிமை மீறல் புகாருக்கு பொறுப்பேற்கத் தவறி னால் சர்வதேச விசாரணைக்கு ஐநா மனித உரிமை கவுன்சில் நடவடிக்கை எடுக்கும் என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ஐநா விசார ணைக்கு ஆதரவு தரமாட்டோம் என இலங்கை அறிவித்தது. 2009ல் நடந்த இறுதிகட்டப் போரின்போது சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக எழும் புகார் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என அவ்வப்போது கோரிக்கை எழுந்தபோதும் அதை இலங்கை ஏற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x