Published : 21 Jun 2014 10:00 AM
Last Updated : 21 Jun 2014 10:00 AM
கிழக்கு உக்ரைனில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் இடையிலான மோதலில் வியாழக்கிழமை இரவு 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த பல வாரங்களாக ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில் யாம்பில் என்ற கிராமத்துக்கு வெளியில் வியாழக் கிழமை நடைபெற்ற மோதலில் ராணுவத்தின் தரப்பில் 7 வீரர்கள் இறந்ததாகவும் 30 வீரர்கள் காயமுற்றதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 300 பேர் இறந்ததாக அவர் கூறினார். ஆனால் இத்தகவலை உடனே உறுதிப்படுத்திக்கொள்ள முடிய வில்லை.
ஐ.நா. அளித்துள்ள தகவலின் படி, கிழக்கு உக்ரைனில் கடந்த மே 7-ம் தேதி முதல், இருதரப்பு மோதலில் 257 சிவிலியன்கள் உள்பட 356 பேர் இறந்துள்ளனர்.
அமைதி திட்டம் வெளியீடு
இதனிடையே கிழக்கு உக்ரைன் பிரச்சினைக்கு, மேற்கத்திய ஆதரவு உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரஷென்கோ 14 அம்ச அமைதித் திட்டம் ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
கடந்த 72 மணி நேரத்தில், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதினுடன் அவர் 2 முறை தொலைபேசியில் பேசிய பிறகு இத்திட்டத்தை அவர் வெளியிட்டார். அரசியல் சாசன திருத்தம் மூலம் அதிகாரங் கள் பரவலாக்கப்படும் என அதில் உறுதியளித்துள்ள பொர ஷென்கோ, கிளர்ச்சியாளர்கள் உடனே தங்கள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என வலியுறுத் தியுள்ளார்.
கொடூர குற்றங்களில் ஈடுபட்ட வர்கள் தவிர மற்றவர்கள் மீது குற்ற நடவடிக்கை இருக்காது, உக்ரைன் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த கூலிப்படையினர் பத்திரமாக வெளியேற அனுமதி உள்ளிட்ட உறுதிமொழிகளை அவர் அளித் துள்ளார். உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனே செயல்படத் தொடங்க வேண்டும் என்றும் பொரஷென்கே வலியுறுத்தியுள்ளார். ஆனால் இக் கோரிக்கையை ஏற்க முடியாது என பிரிவினைவாத தலைவர்கள் உடனே அறிவித்துவிட்டனர்.
கிழக்கு உக்ரைன் நகரங்கள் பலவற்றில் அரசு அலுவலகங்களை அவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
அரசின் அமைதி திட்டம் 10 நாட்கள் வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையி்ல், அரசுத் தரப்பில் உடனடி சண்டை நிறுத்தம் பற்றி இதில் எதுவும் கூறப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT