Published : 22 Jun 2014 01:31 PM
Last Updated : 22 Jun 2014 01:31 PM
இனம் மற்றும் மத ரீதியான தீவிரவாதத்தால் நாடு வீழ்ச்சி யுறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்தார்.
இலங்கையில் சிறுபான்மை யினரான முஸ்லிம்கள் மீது பவுத்தர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. சமீபத்தில் பெருவலா, தர்கா நகர், அலுத்கமா பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காய மடைந்தனர்.
இந்நிலையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறிய தாவது: “இதுபோன்ற தாக்குதலால் ஏற்படும் தீமையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இப்பிரச்சி னைக்கு தீர்வு காண யாரும் முன்வரமாட்டார்கள். இறுதியில், அரசுதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
மக்களிடையே நிலவும் சகோதரத்துவத்தையும், நல்லிணக் கத்தையும் சகித்துக் கொள்ள விரும்பாத சிறு கும்பல் ஒன்று, சர்வதேச அளவில் இலங்கைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தித் தரும் வகையில் தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.
மதம் அல்லது இன ரீதியாக ஒரு பிரிவினர், மற்றொறு பிரிவினரை அடக்கியாள நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுபோன்ற தீவிர போக்கு டையவர்கள், நாட்டை அழிக்க முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT