Published : 20 Jun 2014 11:00 AM
Last Updated : 20 Jun 2014 11:00 AM
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தனது தாய் நாடான ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் தனக்கு அரசியல் அடைக்கலம் தந்துள்ள ஈகுவடாருக்கு ஆதரவு அளிப்பதாகவும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பான ரகசிய இ-மெயில்களையும், ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி சர்வதேச அளவில் பிரபலமானவர் ஜூலியன் அசாஞ்சே.
ஸ்வீடனில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பிரிட்டனில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்ட அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்து இப்போதும் அங்கேயே தங்கியுள்ளார். ஈகுவடார் அவருக்கு அரசியல் அடைக்கலம் அளித்துள்ளது.
ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்து இரு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவர் செய்தியாளர்களுக்கு தொலைபேசி வழியாக பேட்டியளித்தார். அதில் கூறியிருப்பது: கால்பந்து போட்டியை டி.வி.யில் பார்த்து வருகிறேன். இப்போட்டியில் எனது ஆதரவு ஈகுவடருக்குத்தான். அந்த அணிதான் வெல்ல வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவரை நடந்து முடிந்த விஷயங்களில் ஆஸ்திரேலிய அரசு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று அசாஞ்சே கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT