Published : 10 Nov 2020 09:16 PM
Last Updated : 10 Nov 2020 09:16 PM
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் தேர்தலில் மோசடி நடந்ததாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும் இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்தநிலையில் இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளிவரும். நாங்கள் அமெரிக்காவை சிறப்பாக உருவாக்குவோம். நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
WE ARE MAKING BIG PROGRESS. RESULTS START TO COME IN NEXT WEEK. MAKE AMERICA GREAT AGAIN!
— Donald J. Trump (@realDonaldTrump) November 10, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT