Published : 05 Nov 2020 10:33 AM
Last Updated : 05 Nov 2020 10:33 AM
அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிபர் பதவியை நோக்கி முன்னேறி வருகிறார்.
ட்ரம்ப் பல மாநில முடிவுகளை எதிர்த்து பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். ஆனால் மோசடி நடந்ததற்கான எந்த ஆதாரங்களையும் அவரால் அளிக்க முடியவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகனான ட்ரம்ப் ஜூனியர் சமூகவலைத்தளத்தில் இட்ட பதிவு சர்ச்சையாகியுள்ளது.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சியை சிகப்பு வர்ணத்திலும் ஜனநாயகக் கட்சியை நீல வர்ணத்திலும் குறிப்பிடுவது வழக்கம்.
ட்ரம்ப் ஜூனியர் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் உலக வரைபடம் ஒன்றை வெளியிட்டு அதில் எந்தெந்த நாடுகளில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிகளுக்கு ஆதரவு உள்ளது என்பதை சிகப்பு மற்றும் நீல வர்ணத்தில் அடையாளப்படுத்தினார்.
இதில் இந்தியாவை ஜனநாயகக் கட்சி ஆதரவு என்று நீல நிறத்தில் குறிப்பிட்டார். பாகிஸ்தானை சிவப்பு நிறத்தில் குறிப்பிட்டிருந்தார். ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக அவர் குறிப்பிட்டிருந்தது சர்ச்சைக் கருத்தாகும். சீனாவை நீல நிற ஆதரவாகக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT