Published : 05 Nov 2020 08:03 AM
Last Updated : 05 Nov 2020 08:03 AM
அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, இதில் அமெரிக்க அதிபராக பதவியேற்கத் தேவையான 270 தேர்தல் சபை வாக்குகளை நோக்கி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னேறி வருகிறார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ஜோ பைடன் 253 தேர்தல் சபை வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார், ட்ரம்ப் 214 வாக்குகளுடன் தேங்கியுள்ளார்.
விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களையும் ஜோ பைடன் வென்றுள்ளார்.
புதனன்று ட்ரம்ப் தான் வெற்றி பெற்றதாக முழக்கமிட்டார். இன்று பல மாநிலங்களில் சட்டப்போராட்டத்தை நிகழ்த்தி வருகிறார்.
இன்று தொடர் ட்வீட்களில் தேர்தலில் மோசடி நடந்துள்ளது என்று ஏகப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்துள்ளார் ட்ரம்ப். பென்சில்வேனியா வாக்கு எண்ணிக்கை மீதும் சந்தேகம் கொண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார் ட்ரம்ப்.
மிச்சிகனில் பைடனின் வெற்றி வெள்ளை மாளிகை நோக்கி அவர் நடைபோடுவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. நெவாடா, அரிசோனாவில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார், இங்கு வெற்றி உறுதியாகி விட்டால் போதிய தேர்தல் சபை வாக்குகளுடன் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவார். பென்சில்வேனையாவிலும் ஜனநாயகக் கட்சியே வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து ட்ரம்ப், “எங்கள் வழக்கறிஞர்கள் வாக்கு எண்ணிக்கையை அணுக வேண்டும் என்று கேட்டனர். ஆனால் என்ன பயன்? ஏற்கெனவே நம் அமைப்பின் நேர்மைக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டு விட்டது. அதிபர் தேர்தலுக்கே சேதம் விளைவிக்கப்பட்டு விட்டது. இதைத்தான் விவாதிக்க வேண்டும்” என்று டிவிட்டரில் காட்டுக் கூச்சல் போட்டு வருகிறார்.
மாறாக பைடன் மிகவும் கூலாக, “செயற்பாங்கில் நம்பிக்கை வையுங்கள், நாம் சேர்ந்து வெற்றி பெறுவோம்” என்றார்.
ஜார்ஜியா, மிச்சிகன், பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் மீண்டும் வாக்கெண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் விஸ்கான்சினிலும் மீண்டும் வாக்கெண்ணிக்கை நடக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
ட்ரம்ப் விரக்தியிலும் வெறுப்பிலும் வழக்குகளைத் தொடர, பைடன், “இங்கு மக்கள்தான் ஆட்சி செய்கிறார்கள். அதிகாரத்தை நம் சொந்த விருப்பு வெறுப்பேற்க அறிவிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
செனட் சபையில் 50 அருதிப்பெரும்பான்மை வாக்குகளில் ஜனநாயக கட்சியினர், குடியரசுக் கட்சியினர் இருவரும் தலா 47 வாக்குகள் பெற்றுள்ளனர்.
பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை 218-க்கு ஜனநாயகக் கட்சியினர் 218 இடங்களையும் குடியரசுக் கட்சியினர் 184 இடங்களையும் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT