Published : 04 Nov 2020 12:24 PM
Last Updated : 04 Nov 2020 12:24 PM
அமெரிக்க அதிபர் தேர்தலிலேயே வென்றேயாக வேண்டிய மாநிலமாக வேட்பாளர்களுக்குத் திகழ்வது புளோரிடா மாகாணம், இங்கு கடும் சவால்களுக்குப் பிறகு டொனால்டு ட்ரம்ப், ஜனநாயக வேட்பாளர் பைடனை வீழ்த்தினார்.
மேலும் ட்ரம்ப், அயோவா, ஓஹையோவையும் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதோடு மட்டுமல்லாமல் அதிபராவதற்கான 270 வாக்குகள் பெற்று அருதிப்பெரும்பான்மை பெறும் போட்டியில் பைடன் 220 வாக்குகளுடன் முன்னிலை பெற்றாலும் மிகவும் பின் தங்கியிருந்த அதிபர் ட்ரம்ப் தற்போது பைடனை அச்சுறுத்தும் விதமாக மிகவும் நெருக்கமாக 213 வாக்குகளுடன் மீண்டுமொரு முறை அதிபராவதற்கான பாதையில் முன்னேறி வருவதாகத் தெரிகிறது.
ட்ரம்ப்பும் பைடனும் பல இடங்களில் மிகவும் சவாலாக நெருக்கமான பந்தயத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். டெக்ஸாசையும் ட்ரம்ப் கைப்பற்ற, பைடன் மின்னசோட்டா, நியு ஹாம்ப்ஷயர் ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
நார்த் கரோலினா, ஜார்ஜியா, பென்சில்வேனியா மிக முக்கியமான மாகாணங்கள் இங்கு யார் வெல்வார்கள் என்பதை விரைவில் தீர்மானிக்க முடியாது என்கின்றன அமெரிக்க ஊடகங்கள்.
இந்நிலையில் ட்ரம்பின் மீட்டெழுச்சி குறித்து பைடன் டெலாவரில் தன் ஆதரவாளர்களிடையே கூறும்போது, பொறுமை காக்கவும், நாளை காலை வரை முழு முடிவு குறித்து நாம் எதையும் கூற முடியாது, இன்னும் எண்ணிக்கை முடிந்துவ் இடவில்லை, ஒவ்வொரு வாக்கும் எண்ணப்பட வேண்டும், என்ரார்.
ஆனால் ட்ரம்ப், வெற்றிமுழக்கத்தை இப்போதே உணர்ந்தது போல், நாம் பெரிய வெற்றியை நோக்குகிறோம். அவர்கள் தேர்தலைக் களவாட பார்த்தார்கள். அவர்களை அப்படிச் செய்ய அனுமதிக்க மாட்டோம். தேர்தல் முடிந்த பிறகு யாரும் வாக்களிக்க முடியாது, என்று ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT