Published : 02 May 2014 10:07 AM
Last Updated : 02 May 2014 10:07 AM
பாகிஸ்தானின் முக்கிய ரத்த நாளமாக விளங்குகிறது காஷ்மீர் என விவரித்துள்ளார் அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப்.
ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தியாகி கள் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங் கேற்று ரஹீல் பேசியதாவது:
காஷ்மீர் பிரச்சினை என்பது சர்வதேச சர்ச்சை. இந்த பிரச்சினைக்கு ஐக்கிய நாடு சபையின் தீர்மானத்தின் அடிப்படையிலும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படியும் தீர்வு காணவேண்டும். காஷ்மீர் மக்களின் உயிர்த்தியாகம் வீண் போகாது.
இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவவேண்டும் என்றால் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம். காஷ்மீரில் அமைதி ஏற்பட பாகிஸ்தான் விரும்புகிறது. அதே வேளையில் மோதலுக்கு வந்தால் அதையும் அஞ்சாமல் எதிர் கொள்ளத் தயாராக இருக்கி றோம்.
பாகிஸ்தானில் அமைதி திரும்ப வும் பயங்கரவாதத்தை ஒழிக்கவும் எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் ராணுவம் ஆதரவு தரும் என்றார் ரஹீல்.
இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், முன்னாள் ராணுவ தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி உள்பட ஏராளமான முக்கிய நபர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT