Published : 26 Sep 2020 04:35 PM
Last Updated : 26 Sep 2020 04:35 PM
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை மூலம் ஈரானுக்கு சுமார் 150 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்கா விலகியதிலிருந்து சுமார் 150 பில்லியன் டாலர் வருடாந்திர இழப்பு ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மருந்து மற்றும் உணவு இறக்குமதியையும் அமெரிக்கா தடுக்கிறது. ஈரானின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவைச் சந்தித்துள்ளது.
மேலும், வேலையின்மையும் அதிகரித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு யாரையாவது சபிக்க எண்ணினால் அது அமெரிக்காவாகத்தான் இருக்கும்” என்றார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதரைக் கொலை செய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதரைக் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது என்றும், அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT