Published : 14 Sep 2020 09:22 AM
Last Updated : 14 Sep 2020 09:22 AM
“அமெரிக்காவில், அதிக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதற்கு, இந்திய பிரதமர் மோடி, என்னை தொலை பேசியில் அழைத்து பாராட்டினார்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் 67 லட்சத்து 8 ஆயிரத்து 458 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் கரோனா குறித்து சரியாக கையாளவில்லை என்று ஜனநாயகக் கட்சி அவர் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது.
இந்நிலையில் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் அங்கு சூடுபிடித்துள்ளது.
இதில் நெவாடா மாகாணத்தில், நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ட்ரம்ப் பேசும்போது, உலகிலேயே, கரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகள், அமெரிக்காவில் தான் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவை விட நாம், 4.4 கோடி பரிசோதனைகள் அதிகமாக செய்துள்ளோம்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி, என்னை தொலைபேசியில் அழைத்து, அதிக பரிசோதனைகள் செய்து உள்ளதற்கு பாராட்டுகளை முன்னர் தெரிவித்தார், என்று பெருமிதப்பட்டுக் கொண்டார் அதிபர் ட்ரம்ப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT