Published : 28 May 2014 09:25 PM
Last Updated : 28 May 2014 09:25 PM
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இயற்றிய தீர்மானத்தை ஆளும் கட்சியின் சபாநாயகர் ரானா இக்பால் தடை செய்தார்.
அதாவது நரேந்திர மோடி தொடர்ந்து பாகிஸ்தானை பயங்கரவாதத்துடன் இணைதே பேசி வருகிறார் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கண்டனம்.
இம்ரான் கானின் தெஹ்ரிக் - இ- இன்சாஃப், ஜமாத்-இ-இஸ்லாமி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மோடிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முயன்றனர். ஆனால் ஆளூம் பி.எம்.எல்-என் கட்சி அதனைத் தடை செய்தது.
இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர் இந்தியா மற்றும் நரேந்திர மோடிக்கு எதிராக கடும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
சபாநாயகர் மறைமுகமாக மோடியை ஆதரிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர் தீர்மானத்தின் சில பகுதிகளை செய்தியாளர்களுக்கு வாசித்துக் காட்டினர்:
"இந்தியப் பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டை எந்த வித ஆதாரமும் இல்லாமல் வைக்கிறார். இதனால் நரேந்திர மோடியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும் பலுசிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு இந்தியா நிதியுதவி அளிப்பதை புதிய அரசு நிறுத்தவேண்டும். காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நீராதாரங்களை சட்டவிரோதமாக தங்கள் வசம் வைத்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இந்தியா, பாகிஸ்தான் இடையே சமாதானத்தையே மக்கள் விரும்புகிறார்கள்.
சமாதானத்திற்கான பாகிஸ்தானின் எண்ணங்களை பாகிஸ்தானின் பலவீனமாக இந்தியா கருதுதல் கூடாது. இந்திய, பாகிஸ்தான் சமாதானத்திற்கு இடையூறாக இருக்கும் காஷ்மீர் விவகாரத்திற்கு 1948ஆம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்"
இவ்வாறு எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT