Published : 09 Jul 2020 02:09 PM
Last Updated : 09 Jul 2020 02:09 PM
இந்தியாவில் கரோனா சிகிச்சையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் அமெரிக்காவில் இது அதிபர் ட்ரம்புக்கு எதிரான போராக அரசியலாக்கப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை வர்த்தகப் பிரிவு இயக்குநர் பீட்டர் நவாரோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பீட்டர் நவாரோ கூறியதாவது:
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்தியா இதனை கரோனா சிகிச்சையில் பயன்படுத்தி இறப்பைக் குறைத்துள்ளது. ஆனால் இந்த மருந்தை அமெரிக்க ஊடகங்களும் மருத்துவத் துறையில் சில பிரிவினரும் அரசியலாக்கி விட்டனர்.
இந்த மருந்தின் பக்க விளைவுகளை ஊதிப்பெருக்கி பீதியைக் கிளப்பி விட்டனர். ட்ரம்புக்கு எதிரான போராக மாற்றி விட்டனர். இது ஆபத்தான மருந்து என அச்சத்தை கிளப்பிவிட்டனர். இந்த மருந்தைப் பயன்படுத்தியதில் 50% நோயாளிகள் குணமடைந்திருப்பதாகவெ ஜேஐடி ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் டெட்ராய்ட் மருத்துவர்கள் சிலர் இதனை பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழகத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT