Last Updated : 09 Jul, 2020 11:39 AM

 

Published : 09 Jul 2020 11:39 AM
Last Updated : 09 Jul 2020 11:39 AM

லேசான கரோனா அறிகுறிகள் இருக்கும் நோயாளிகளுக்கு மூளை தொடர்பான நோய்கள் கண்டுபிடிப்பு: லண்டன் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

லண்டன்,


லேசான கரோனா அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மூளை தொடர்பான ஸ்ட்ரோக், மூளை அழற்சி, நரம்பு பாதிப்பு, டெலிரியம் போன்றவை ஏற்பட்டுள்ளதை லண்டனில் உள்ள மருந்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கரோனா வைரஸின் நேரடியான தாக்கத்தால் இந்த நோய்கள் ஏற்படாது ஆனால், உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களை அதிகமான நோய் எதிர்ப்புச்சக்தி முறை தாக்குவதால் இது பாதிப்பு ஏற்படுகிறது என்று லண்டன் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

பிரைன்(Brain) எனும் மருத்து இதழலில் இந்த கட்டுரையை லண்டன் மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தகரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, ஏடிஇம்(Acute disseminated encephalomyelitis (ADEM)) என்ற பாதிப்பு வரக்கூடும். ஏடிஇஎம் என்பது, வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் மூளை அழற்சி மற்றும் முதுகு தண்டுவடத்தில் செல்லும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாகும்

பிரிட்டனில் உள்ள யூனிவர்சிடி காலேஜ் ஆப் லண்டன்(யுசிஎல்) கல்விநிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆய்வாளர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது

மாதத்துக்கு ஒரு நோயாளி ஏடிஇஎம் நோயால் பாதிக்கப்பட்டவரை எதிர்கொள்கிறோம். ஆனால், இது கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது பெரும் கவலையை அளித்துள்ளது. நரம்பியல் தொடர்பான பாதிப்புகளோடு வருபவர்கள் அனைவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், லேசான அறிகுறிகளுடன் இருந்தவர்கள், சுவாசக் கோளாறு ஏதும் ஏற்படாதவர்கள். இவர்கள் அனைவரும் 16 வயது முதல் 85 வயது வரையிலான நோயாளிகளாக இருந்தனர். ஏறக்குறைய 43 நோயாளிகளுக்கு நேஷனல் ஹாஸ்பிடல் ஆப் நியூலாலஜி அன்ட் நியூலோசர்ஜரியில் சிகிச்சை அளித்தோம்

இந்த 43 நோாயாளிகளும் கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படாதவர்கள், ஆனால், பெரும்பாலும் நரம்பியல் நோயால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 10 நோயாளிகள் டெலிரியம் எனச் சொல்லப்படும் மூளை செயல்பாடுக் குறைவு, குழப்பமான நிலை, பித்துபிடித்து போன்று இருத்தலுடன் காணப்பட்டனர். 12 நோயாளிகள் மூளை அழற்சியினாலும், 8 நோயாளிகள் ஸ்ட்ரோக்கினாலும், 8 பேர் நரம்புக் கோளாறாலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இதுகுறித்து யூனிவர்சிஸ்டி காலேஜ் ஆப் லண்டன் பேராரிசியர் மைக்கேல் ஜாண்டி கூறுகையில் “ கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு லேசான முதல் நுரையீரல் தொடர்பான எந்த பாதிப்பும் இல்லாத நோயாளிகள் அதிகமான அளவில் நரம்பு தொடர்பான நோயினாலும், மூழை அழற்சியினாலும் பாதிக்கப்படுவதை அதிகமான அளவில் காண்கிறோம். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளிகள் இந்த அறிகுறிகள் வந்தால் விழிப்புடன் இருப்பார்கள் என நம்புகிறேன்.

கரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவு மனிதர்களுக்கு மூளை தொடர்பான பாதிப்பை ஏற்படுத்துமா என்பது ெதரியவில்லை. கடந்த 1920களிலும், 1930-களிலும் 1918-ம் ஆண்டிலும் ஐரோப்பாவில் பாதிப்பை ஏற்படுத்திய encephalitis lethargica போன்று பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பது இனிமேல்தான் தெரியும்

encephalitis lethargica என்பது பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் நேரடியாக மனிதர்களின் மூளையைத்தாக்கும் நோயாகும்.

நாங்கள் பரிசோதித்த 43 நோயாளில் கரோன வைரஸ் நோயாளிகளின் மூளையில் உள்ள செரி்ப்ரோஸ்பைனல் பகுதியில் இல்லை. ஆதலால், கரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்கும் வாய்பிப்பில்லை. ஆனால், கரோனா வைரஸைத் எதிர்க்கத் தரப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளால் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து அது உடலின் திசுக்களையே தாக்க ஆரம்பித்து அதனால் நரம்புப்பகுதி பாதிப்பு, மூளை அழற்சி, ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x