Published : 15 May 2020 08:53 AM
Last Updated : 15 May 2020 08:53 AM
ஏற்கெனவே அமெரிக்கா-சீனா இடையே இருந்து வந்த வர்த்தகப் போர் பேச்சு வார்த்தைகள் மூலம் சரியாகாமல் இழுபறியில் உள்ள நிலையில் கரோனா பாதிப்பினால் இருநாடுகளின் உறவுகளில் பெரிய அளவில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் அமெரிக்க பென்ஷன் நிதி முதலீடுகளாக உள்ள பலநூறுகோடி டாலர்கள் நிதியை வாபஸ் பெற ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
“பில்லியன்கள் அளவில் டாலர்கள், ஆம் பில்லியன்கள் ஆம் நான் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளேன்.” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
அதே போல் அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக்கில் சீன நிறுவனங்கள் லிஸ்ட் செய்யப்படுவதற்கு அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுமா என்றும் உதாரணமாக அலிபாபா போன்ற பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் காட்டுவது போல் இவர்கள் தங்கள் வருவாய்க் கணக்குகளைக் காட்டுவதில்லையே என்று ஃபாக்ஸ் நேர்காணல் செய்பவர் கேட்க அதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது,
“ஆம் இதையும் கடுமையாகவே நாங்கள் பார்த்து வருகிறோம். ஆனால் இதைச் செய்வதில் பிரச்சினைகள் உள்ளன, நாம் விதிமுறைகளைக் கடுமையாக்கினால் சீனா என்ன செய்யும்? லண்டன் பங்குச் சந்தைக்கோ அல்லது வேறு நாட்டு பங்குச் சந்தைக்கோ செல்வார்கள்.
நாம் கடுமையாக இருக்க விரும்புகிறோம், அனைவருமே கடினமாகவே இருப்பார்கள். நான் மிகவும் கடினமானவன். ஆனால் சீனா என்ன செய்யும் ‘சரி நாங்கள் லண்டன், அல்லது ஹாங்காங் பங்குச்சந்தைக்குச் செல்கிறோம்’ என்று கூறும்.” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.
கரோனா விவகாரத்தில் சீனாவை பொறுப்பேற்கச் செய்யும் சட்டத்தை அமெரிக்க செனட்டர்கள் கொண்டு வந்ததையடுத்து சீனா அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT