Published : 30 Apr 2020 05:01 PM
Last Updated : 30 Apr 2020 05:01 PM
கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா செயல்பட்ட விதம் ஒன்றே தன்னை அதிபர் தேர்தலில் தோற்கடிக்க சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கான அத்தாட்சியாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், வைரஸ் விவகாரத்தில் சீனா உணரும்படியாக தன்னால் நிறைய செய்ய முடியும் என்றார்.
சீனப் பொருட்களின் மீது அதிக வரிவிதிப்பு, கொடுக்க வேண்டிய கடன் தொகையை நிறுத்தி வைப்பது போன்றவற்றை ட்ரம்ப் மனதில் கொண்டுள்ளாரா என்று கேட்டதற்கு, “நிறைய விஷயங்களை என்னால் செய்ய முடியும். என்ன நடந்தது என்பதை கூர்ந்து கவனித்து வருகிறோம்.
சீனா நான் தோற்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். வாணிபம் மற்றும் பிற விவகாரங்களில் நான் அவர்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்திலிருந்து மீள அவர்கள் ஜனநாயக போட்டி வேட்பாளர் ஜோ பிடனை அதிபராக்க சீனா விரும்பும், இதற்கான பிஆர் வேலைகளில் சீனா இறங்கியுள்ளதும் எனக்குத் தெரியும்.
கரோனாவுக்கு முன்பாக கொடிக்கட்டி பறந்தோம், வரலாற்றின் சிறந்த பொருளாதாரமாக விளங்கினோம். கவர்னர்கள் சிலர் இந்த கரோனா காலத்தில் நன்றாகச் செயல்படுகின்றனர், சிலர் முரண்டு பிடிக்கின்றனர். விஷயங்கள் நன்றாகப் போய்க்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு கூறியுள்ளார் ட்ரம்ப்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT