Published : 07 Apr 2020 08:59 AM
Last Updated : 07 Apr 2020 08:59 AM
கரோனா நோயாளிகள் உயிர்காக்கப் பயன்படும் ஹைட்ராக்ஸிகுளுரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு இந்தியாஅனுமதி வழங்காவிட்டால் தகுந்த பதிலடி இருக்கும் என்று அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்
கரோனா வைரஸால் அமெரிக்கா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் அங்குதட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மற்ற நாடுகளை அமெரிக்கா நம்பியுள்ளது.
கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயி்ர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்குப்பின், இந்த மாத்திரைகளை ஏற்றுமதியை மத்தியஅரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது.
ஆனால், இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடியும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதிக்கு இந்தியா மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தபோதிலும் வர்த்தக ரீதியாகவே இது செல்லுபடியாகும், மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவுடன் அமெரிக்கா நல்ல நட்புடன் இருக்கிறது.ஏனென்றால் பல ஆண்டுகளாக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து இந்தியா பல்வேறு பலன்களை அடைந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது நாங்கள் கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தால் அது நிச்சயம் எனக்கு வியப்பாகத்தான் இருக்கும்
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை நீக்குங்கள் என்று இந்தியப் பிரதமரிடம் ஞாயிற்றுக்கிழமை காலை ேபசினேன். மாத்திரை ஏற்றுமதிக்கு நீங்கள் அனுமதியளித்தால் அது பாராட்டுக்குரியதாக இருக்கும் என்றேன்.
நான் கேட்டுக்கொண்டபின்பும் இந்திய அரசு மத்திரைகள் ஏற்றுமதி்கு அனுமதியளிக்காவிட்டால், பரவாயில்லை, ஆனால், எதிர்காலத்தில் பதிலடி இருக்கும். ஏன் பதிலடி கொடுக்கக்கூடாது?” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT