Last Updated : 01 Apr, 2020 10:49 AM

 

Published : 01 Apr 2020 10:49 AM
Last Updated : 01 Apr 2020 10:49 AM

அமெரிக்காவில் கரோனா கோரத்தாண்டவம்; பலி எண்ணிக்கை 4,000-ஐ கடந்தது- ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தகவல்

பிரதிநிதித்துவப் படம்

புதனன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 கொடூர வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4,000த்தைக் கடந்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக கரோனா தடம் காணும் பிரிவு தெரிவித்துள்ளது..

சனிக்கிழமையன்ரு 2,010 ஆக இருந்த பலி எண்ணிக்கை 3 நாட்களில் இரட்டிப்பாகி பலி எண்ணிக்கை 4,076 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் பதிவான பலியானோர் எண்ணிக்கையில் 40% நியுயார்க்கைச் சேர்ந்தவர்கள். செவ்வாயன்று சீனாவையும் கடந்து சென்றது அமெரிக்கா. சீனாவில் வூஹானில் கடந்த டிசம்பரில் மையம் கொண்டிருந்த கொரோனா தொற்று உலகம் முழுதும் சுமார் 190 நாடுகளுக்குப் பரவி சுமார் 8 லட்சம் பேர்களைத் தொற்றியுள்ளது.

சுமார் 42,000 உயிர்களை உலகம் முழுதும் பலி வாங்கியுள்ளது.

அமெரிக்காவி உறுதி செய்யபட்ட கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 189, 510 ஆக அதிகரித்துள்ளது. உலகிலேயே தற்போது தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.

ஆனால் இத்தாலி, ஸ்பெயினில் பலி எண்ணிக்கை அமெரிக்காவை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x