Published : 11 May 2014 12:45 PM
Last Updated : 11 May 2014 12:45 PM

யிங்லக் ஷினவத்ராவுக்கு ஆதரவாகப் பேரணி

தாய்லாந்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் யிங்லக் ஷினவத்ராவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தலைநகர் பாங்காக்கில் சனிக்கிழமை பேரணி நடத்தினர்.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மாற்றப்பட்டதில்யிங்லக் ஷினவத்ரா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த அரசியல் சாசன நீதிமன்றம், பிரதமர் பதவியில் இருந்து யிங்லக் விலக அண்மையில் உத்தரவிட்டது.

எதிர்க்கட்சிகள் கெடு

இந்த உத்தரவைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தகத் துறை அமைச்சர் நிவாட்டம் ராங் பூன்சாங் பய்சான் நியமிக் கப்பட்டார். அவரை திங்கள் கிழமைக்குள் மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கெடு விதித் துள்ளன.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி கள் சார்பில் பாங்காக்கில் வெள்ளிக்கிழமை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. அதற்குப் போட்டியாக யிங்லக் ஷினவத்ராவின் ஆதரவா ளர்கள் பாங்காக்கில் சனிக்கிழமை பேரணி நடத்தினர்.

அதனை வழிநடத்திய ஆளும் கட்சியின் மூத்த தலைவர் ஜாடு பார்ன் புரோம்பான் நிருபர்களிடம் கூறியபோது,

நாட்டின் ஜனநாயகத்துக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள் ளது. ஆட்சியைக் கவிழ்க்க சிலர் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும்வரை நாங்கள் தலைநகரில் தொடர்ந்து முகாமிட் டிருப்போம் என்று தெரிவித்தார்.

கூடாரம் அமைக்கும் ஆளும்கட்சியினர்

அரசியல் கட்சிகள் சாராத இடைக்கால அரசின் மேற்பார்வை யில் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி 2013-ம் ஆண்டு இறுதியில் இருந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின் றன. அவர்கள் பாங்காக் நகரச் சாலைகளின் ஓரங்களில் கூடாரம் அமைத்து அங்கேயே தங்கி யுள்ளனர்.

இப்போது ஆளும் கட்சி ஆதரவாளர்களும் பாங்காக்கில் கூடாரம் அமைத்து அங்கேயே தங்க தொடங்கியுள்ளனர். இரு கட்சியினரும் பாங்காக்கில் முகா மிட்டிருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x