Published : 28 May 2014 12:07 PM
Last Updated : 28 May 2014 12:07 PM
தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த கல்வி அமைச்சர் சதுரன் சைசாங் கைது செய்யப்பட்டார். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ராணுவ ஆட்சி மன்ற குழு முன்ஆஜராகவேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிராக ரித்துள்ள அவர் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையை துணிச்ச லுடன் ஆட்சேபித்துள்ளார்.
திடீரென ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டு தாய்லாந்து அமைச்சரவை கலைக்கப்பட்டதையடுத்து எல்லா அமைச்சர்களுமே தலைமறைவானார்கள்.
கல்வி அமைச்சர் சதுரன் சைசாங் மட்டும் பதுங்கி இருப்பதில் அர்த்தம் இல்லை என வெளியில் வந்துள்ளார். மீண்டும் மக்களாட்சி ஏற்படவேண்டும். ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் போகப் போக எதிர்ப்பு வலுக்கும். இது பேரழிவைத் தான் கொண்டு வந்து சேர்க்கும் என்று எச்சரிக்கை விடுத்தார் சைசாங்.
தாய்லாந்தின் ஆட்சி அதிகாரத்தை ராணுவ குழுவினர் வியாழக் கிழமை கைப்பற்றி, அரசு உயர் அதிகாரிகள் பெரும்பாலானவர் களை கைது செய்தனர். இந்நிலையில் சதுரன் உள் ளிட்ட இதர அமைச்சர்கள் அனை வரும் தாமாகவே ஆஜராக வேண்டும். மறுத்தால் சிறையில் அடைக்கப்படுவதுடன், அபராத மும் கட்ட வேண்டி வரும் என எச்சரித்தனர்.
இந்த மிரட்டலுக்கு அஞ்சாத சதுரன், தாய்லாந்து சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு ஆட்சி கவிழ்ப்பு தீர்வாகாது என நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறினார். கைது நடவடிக்கையை நான் எதிர்க்க மாட்டேன். அ தேவேளையில் பதுங்கியும் இருக்க மாட்டேன். ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையை நான் ஏற்கவில்லை என்பதால் அதைச் செய்தவர்கள் முன் சரணடைய மாட்டேன் என்றார்.
நாட்டில் காணப்படும் நெருக்கடி களுக்கு தீர்வு காண 2 நாள் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அமைச்சர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ராணுவ ஜெனரல் பிரயூத் சான் ஓச்சா மே 20-ம் தேதி அழைப்பு விடுத்தார். ஆனால் பேச்சு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிக்கப் பட்டது.
உள்ளே இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். தொலைக்காட்சியில் தோன்றி பேசிய ஜெனரல் பிரயூத், நாட்டில் ராணுவ சட்டம் பிறப்பிக் கப்பட்டுள்ளதாகவும் அதிகாரம் ராணுவத்தின் கைக்கு வந்துவிட்ட தாகவும் அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT