Published : 11 May 2014 12:08 PM
Last Updated : 11 May 2014 12:08 PM
ஏழை, எளியவர்கள் பயனடையும் வகையில் செல்வமும், வளமும் நியாயமான முறையில் பகிர்ந் தளிக்கப்பட வேண்டுமென்று உலக நாடுகளுக்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலாளித்துவத்தின் நியாய மற்ற நடவடிக்கைகள், தற்போதைய நவீன பொருளாதார முறை, மனிதாபிமானத்தை ஒதுக்கி வைத்து நடந்து கொள்வது போன்ற வற்றை கண்டித்து போப் பிரான்சிஸ் அடிக்கடி கருத்துத் தெரி வித்து வருகிறார்.
இந்நிலையில் உலகின் செல் வமும், வளமும் ஓருசிலரிடம் மட்டுமே குவிவதைத் தடுத்து, ஏழை கள் பயனடையும் வகையில் அவற்றை பகிர்ந்தளிக்க வேண்டு மென்று அவர் வலியுறுத்தி யுள்ளார். ஐ.நா. தலைவர் பான் கி மூன் உள்பட ஐ.நா. அமைப் பின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் பலர் போப் பாண்டவரை சந்திப்பதற்காக வாடிகன் நகருக்கு வந்துள்ளனர். அவர்கள் மத்தியில் போப்பாண் டவர் பேசியது: பொருளாதார ரீதியாக ஏழை மக்கள் தொடர்ந்து பின்னுக்கு தள்ளப்பட்டு வருவது தடுக்கப்பட வேண்டும். உலகின் செல்வமும், வளங்களும் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே இருக்கக் கூடாது. பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத் துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
இதற்கு அரசுகள் வழிவகை செய்ய வேண்டும். இதற்கு தனியார் துறையின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.
வறுமை, பஞ்சம் ஆகியவற் றுக்கான மூல காரணத்தை கண் டறிந்து அவற்றை ஒழிக்கும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதும் அவசியம் என்று போப்பாண்டவர் பேசினார்.
ஐனவரி மாதம் நடைபெற்ற உலக பொருளாதார மாநாடு குறித்து அப்போது பேசிய போப் பாண்டவர், இதே போன்ற கருத் தைத் தெரிவித்தார். இதையடுத்து போப்பாண்டவர் ஒரு மார்க்சிஸ்ட் என்று அமெரிக்காவில் விமர்சனங்கள் எழுந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT